நடிகை விசித்ரா தந்தை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

நடிகை விசித்ரா தந்தை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

221

Vichitra

நடிகை விசித்ரா சென்னை வேளச்சேரியில் வசிப்பவர். இவருக்குச் சொந்தமான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்லம்பட்டிடையில் உள்ள பண்ணை வீட்டிற்கு கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் (70), தாய் வசந்தா (65) ஆகியோர் சென்றனர்.

அப்போது அங்கு வந்த இரு நபர்கள் வில்லியம்ஸை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். வசந்தாவையும் தாக்கி அவர் அணிந்திருந்த 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் பண்த்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் இரு செல்லிடப்பேசிகளையும் திருடிச்சென்றனர்.

இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை, கொள்ளைத் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், எலப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், வேலு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-இன் நீதிபதி ஜி.கருணாநிதி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முதல் குற்றவாளி சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்து இறந்து விட்டார். இந்நிலையில்

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2-ஆவது குற்றவாளி வேலுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கருணாநிதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY