Home Tamil Cinema News ஆங்கில சீரியலில் நடித்து சர்வதேச லெவலுக்கு வந்த நடிகை..

ஆங்கில சீரியலில் நடித்து சர்வதேச லெவலுக்கு வந்த நடிகை..

23

பிரியங்கா சோப்ரா என்றதும் நம்மவர்க்கு முதிலில் தெரிவது என்னவோ விஜய் நடித்த தமிழன் படம் தான். பாலிவுட் நடிகையான இவர் உலக அழகியாகவும் இருந்துள்ளார். டாப் ஸ்டார் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துவருகிறார்.

ஹிந்தி சினிமாவை தாண்டியும் அவர் ஹாலிவுட்டில் கால்பதித்து விட்டார். பே வாச் படத்தை தொடர்ந்து குவாண்டிகோ என்ற ஆங்கில சீரியலில் நடித்து சர்வதேச லெவலுக்கு வந்துவிட்டார்.

தற்போது பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2016 ஜூன் 1 முதல் 2017 ஜூன் 1 வரை இவர் ரூ 65 கோடி வருமான ஈட்டியுள்ளார். மேலும் இவர் அதிக சம்பளம் வாங்கும் டிவி சீரியல் நடிகைகள் லிஸ்டில் 8 வது இடத்தை பிடித்துள்ளார்.