Home Tamil Cinema News ஆண்ட்ரியா, நயன்தாராவின் இடத்தை பிடித்த அடா ஷர்மா

ஆண்ட்ரியா, நயன்தாராவின் இடத்தை பிடித்த அடா ஷர்மா

164

270515-adah-sharma-400

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து தற்போது வெளிவர இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில், இந்த பாடலுக்கு கால்ஷிட் காரணமாக நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாக ஆண்ட்ரியாவை வைத்து பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டது.

இந்நிலையில் தற்போது திடீரென ஆண்ட்ரியாவுக்கு பதிலாக தெலுங்கு நடிகை அடா ஷர்மாவை இந்த பாடலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இப்பாடலின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் அடா ஷர்மா.