அதே கண்கள் – விமர்சனம்

அதே கண்கள் – விமர்சனம்

28
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

1967ல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே மிரட்டிய படம் அதே கண்கள், அந்த படத்தின் தலைப்புடனே ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரில்லர் படம் தான் அதே கண்கள்.

3
இயக்கம்: ரோகின் வெங்கடேசன்
ஒளிப்பதிவு: ரவிவர்மன் நீலமேகம்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: சி.வி குமார்
நடிகர்கள்: கலையரசன், ஜனனி, சிவ்டா, பாலசரவணன்

1967ல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே மிரட்டிய படம் அதே கண்கள், அந்த படத்தின் தலைப்புடனே ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரில்லர் படம் தான் அதே கண்கள்.

படத்தின் கதைப்படி ஆரம்பத்திலேயே ஒரு விபத்து ஏற்படுகின்றது, அதை தொடர்ந்து கண் தெரியவில்லை என்றாலும், திறம்பட சமையல் செய்து ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார் கதாநாயகன் கலையரசன்.

அவரை சிவ்டா தினமும் யதார்த்தமாக சந்திக்க ஒரு கட்டத்தில் காதலாக மாறுகின்றது. இதை தொடர்ந்து சிவ்டா குடும்பம் பெரும் பணக்கஷ்டத்தில் இருக்க, அதற்கு கலையரசன் உதவுவதாக வாக்கு கொடுக்கின்றார்.

அன்று இரவே கலையரசனுக்கு ஒரு விபத்து ஏற்பட அதை தொடர்ந்து அவருக்கு நடக்கும் கண் அறுவை சிகிச்சையால் பார்வை வருகிறது.

இந்த இடைப்பட்ட நாட்களில் சிவ்டா மாயமாக, அவரை தேடும் பயணத்தில் கலையரசன் பல அதிர்ச்சிகரமான சம்பங்களை சந்திக்கின்றார். யார் இந்த சிவ்டா? என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் இயக்குனர் ரோகில் ஆடியன்ஸை சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றார்.

 

மெட்ராஸ், கபாலி என அனைத்து படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலேயே அசத்தினார் கலையரசன். இவர் நடித்த டார்லிங் 2 படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு ஹீரோவாக வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் கட்சியமைப்புகள் நிறைய தெகிடி போலவே இருப்பதால் அதே ஹீரோயினை கமிட் செய்துவிட்டார்கள் போல. ஜனனி பெரிதும் நடிக்கும் ஸ்கோப் இல்லை. ஆனால், மொத்த படத்தையும் தூக்கி செல்வது சிவ்டா தான்.

ரசிகர்கள் அனைவரையும் கவனிக்க வைக்கின்றார். அதிலும் இரண்டாம் பாதியில் மெல்லிய புன்னகையில் இவர் கடந்து செல்லும் பல காட்சிகள் விசில் பறக்கின்றது.

படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கின்றது.

இரண்டாம் பாதி அளவிற்கு விறுவிறு காட்சிகள் இல்லாததால் முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது. பாலசரவணன் காமெடி காட்சிகளும் கைக்கொடுக்கவில்லை.

பாடல்களை விட பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியுள்ளார். அதிலும் சிவ்டா வரும் காட்சிகளில் அந்த பின்னணி பாடல் அனைவரையும் கவர்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை. சிவ்டாவிற்கான அழுத்தமான காட்சியமைப்புக்கள் படத்திற்கு பக்கபலமாக உள்ளது.

படத்தின் பல இடங்களில் லாஜிக் மீறல். குறிப்பாக தன்னை பத்திரிக்கையாளர் என்று கலையரசன் கூற, ஐடி கார்ட் கூட கேட்காமல் பாலசரவணன் நம்புவது எப்படி என்பது போன்ற காட்சிகள் எதர்த்தமாக இல்லை.

மொத்தத்தில் த்ரில்லர் படத்தை விரும்பும் ரசிகர்கள் பார்க்கவேண்டிய படம் இந்த அதே கண்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY