அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

281
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

கச்சேரி ஆரம்பம் என்ற அதிரடியான ஒரு படத்தை இயக்குனர் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் திரைவண்ணன். மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதிய வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருவதாக கதை நகர்கிறது.

2.7
இயக்கம்: திரைவண்ணன்
ஒளிப்பதிவு: காசி விஷ்வா
இசை: N.R.ரகுநந்தன்
தயாரிப்பு: B.கோபி
நடிகர்கள்: சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி, பவர் ஸ்டார், நைனா சர்வார், ராஜ்கபூர், சிங்கமுத்து

மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதிய வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

adra_machan_visilu

இதனிடையே சிவாவை நாயகி நைனா சர்வார் காதலித்து வருகிறார். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

பவரைப் பற்றி யாராவது தவறாக சொன்னால் அந்த ஸ்பாட்டிலேயே அடிதடியில் இறங்கி போலீஸ், பஞ்சாயத்து என அலையும் ஆர்வக்கோளாறுகளான மூவரும், சுற்றமும், நட்பும் சொல்வது கேட்டு ஒரு கட்டத்தில் கொஞ்சம் முன்னேறி, பவரின் படம் ஒன்றின் மதுரை ஏரியாவை வாங்கி வினியோகம் செய்கின்றனர்.

adra-machan-visilu_1461821395130

அதற்கு சிம்மக்கல் சேகருக்கு அவரது காதலி தேவியும் பழங்காநத்தம் பாபுக்கு அவரது பெற்றோரும், கோரிப்பாளையம் ரஹ்மத் க்கு, அவரது உடன் பிறந்த அண்ணனும் உதவி செய்ய, அப்படத்தின் வெற்றி தோல்வியில் தான் மூவரது எதிர்காலமும் அடங்கியிருக்கிறது எனும் நிலையில், பவர் ஸ்டாரின் அந்தப் படம் எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியைத் தழுவுகிறது.

சாதாரண குடும்பத்தை சார்ந்த இவர்களது பணம் அம்பேல் ஆகிறது. ஆனாலும் தாங்கள் கடவுளாக கருதும் பவர் ஸ்டார் தங்களை கைவிட மாட்டார் என கருதி சென்னைக்கு வரும் மூவரும் பவராலும், பவரின் மேனேஜர் துரையாலும் விரட்டியடிக்கப்பட, மூவரும் பவருக்கும், மேனேஜருக்கும் எப்படி பாடம் புகட்டி தங்கள் பணத்தை திரும்ப பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகின்றனர் என்பது தான் அட்ரா மச்சான்விசிலு படத்தின் கதைக்களம்.

 

adra_machan_visilu

பவர் ஸ்டார் இந்த படத்தில் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகராகவே வரும் அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவர் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் கண்டிப்பாக காதை பிளக்கும். மற்றவர்களை காப்பியடித்து நடித்தாலும், அதில், தனக்கு என்ன வருமோ அதை சரியாகவே செய்திருக்கிறார்.

சிம்மக்கல் சேகராக சிவா, செம கச்சிதம். பவரின் தீவிர ரசிகராக அவரது கட் அவுட்டுக்கு கற்பூரம் காட்டி பாலாபிஷேகம் செய்வதில் தொடங்கி, ஒரு கட்டத்தில் அவருக்கே பாடம் புகட்டுவது வரைShiva சகலத்திலும் தனக்கே உரிய பாணியில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். இவர் ஆடும் நடனத்துக்காக இவருக்கு அடுத்த பாக்யராஜ் என்று பட்டம் கொடுக்கலாம் என்பதுபோல் இருக்கிறது.

Shiva, Priya Asmitha in Adra Machan Visilu Movie Song Photos

சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தவர், இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிவாவைக் காதலிக்கும் தேவியாக புதுமுகம் நைநா சர்வர், செம கிளாமர். எல்லாமும் கச்சிதமாக இருக்கும் அம்மணியிடம் ஏதோ ஒன்று குறையாக தெரிவது படத்திற்கும் சற்றே பலவீனம்.

பவர்ஸ்டாரின் மேனேஜராக வரும் சிங்கமுத்து, அரசியல் நையாண்டியையும் உள்ளே புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள். ‘கச்சேரி ஆரம்பம்’ என்ற அதிரடியான ஒரு படத்தை இயக்குனர் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் திரைவண்ணன்.

Tamilcineamstills.com-adra-machan-visilu-movie-new-stills-13

காசி விஷ்வாவின் கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. சுஜீத்தின் படத்தொகுப்பு, இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம். N.R.ரகுநந்தனின் இசையில் ‘யாரு இவ அடடா யாரு இவ ‘யாரு யாரு இவ’ பாடல் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் அவை காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதமும் அருமை.

மொத்தத்தில் “அட்ரா மச்சான் விசிலு” – கலக்கல் காமெடி.

NO COMMENTS

LEAVE A REPLY