Home Tamil Cinema News 10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா

10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா

155

12

சூர்யா – ஜோதிகா ஜோடி பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இருவருன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.

அதைத்தொடர்ந்து ஜோதிகா  சுமார் 8 வருடங்களுக்குப்பின் கடந்தாண்டு 36 வயதினிலே படத்தில் நடித்தார். 36 வயதினிலே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனால் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஜோதிகா முடிவு செய்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில், ஜோதிகாவுடன் இணைந்து தான் மீண்டும் நடிக்கப் போவதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், இருவரும் சேர்ந்து நடிக்கும் வகையிலான கதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற மே மாதத்திற்குள் ஒரு புதிய கதையை இருவரும் தேர்வு செய்து நடிக்கலாம் என்று சூர்யாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.