Home Tamil Breaking News அ.தி.மு.க அணிகள் இணைந்தது: ஓ.பன்னீர் செல்வம் நெகிழ்ச்சி

அ.தி.மு.க அணிகள் இணைந்தது: ஓ.பன்னீர் செல்வம் நெகிழ்ச்சி

20

சென்னை: ”மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது,” என, பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பேசியதாவது:

எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாங்கள் அனைவரும், ஒரு தாய் மக்கள். இணைப்பிற்கு, முழு ஒத்துழைப்பு தந்த, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இனி வரும் காலங்களில், அனைவரும் ஒன்றாக இருந்து, ஜெ.,யின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

அணிகள் இணைப்பால், மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது; கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டன. இந்த இணைப்பு, வரலாற்று சிறப்புமிக்கது.இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., மட்டும் தான், பிரிந்த பின், மீண்டும் இணைந்துள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து உள்ளோம். இடையில்புகுந்து விடலாம் என நினைத்தவர்களுக்கு, சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும், அதை பேசி தீர்த்து, எம்.ஜி.ஆர்., – ஜெ., என்ற, இரு பெரும் தலைவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவதே, எங்கள் நோக்கம். அனைவரும், இன்று முதல், கருத்து வேறுபாடு இல்லாமல் பணியாற்றி, அ.தி.மு.க.,வின் சின்னமான, இரட்டை இலையை மீட்போம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

ஜெ., ஆன்மா வாழ்த்தும்

முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி பேசியதாவது: யார் விட்டு கொடுப்பதுஎன்ற நிலை ஏற்படாமல், இரு அணிகளையும் வழிநடத்திய பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி இருவரும், மனமுவந்து இணைப்பை வேகமாக முன்னெடுத்தனர். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., புகழையும், தொண்டர்களின் உணர்வையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர், வைத்திலிங்கம் பேசியதாவது: அ.தி.மு.க., என்ற இயக்கம் இருந்தால் தான், தமிழகத்தில், ஏழை மக்கள் வாழ்வு உயரும். கட்சியை துவக்கிய, எம்.ஜி.ஆர்., ஆன்மாவும், நாட்டின் மூன்றாவது கட்சியாக உருவாக்கிய, ஜெ., ஆன்மாவும், இன்று நம்மை மன்னிக்கும். உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும், ஜெ., ஆன்மா வாழ்த்துகிற வகையில், 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இணைந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here