Home Tamil Cinema News ரசிகர்களுக்காக மீண்டும் கேங்ஸ்டராகும் அஜித்!

ரசிகர்களுக்காக மீண்டும் கேங்ஸ்டராகும் அஜித்!

158

ajith_billa_main25

நடிகர் அஜித் திரையுலகில் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்களே. இதை பலமுறை இவரே கூறியுள்ளார். அவர் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் இளம் இயக்குனர்களுடன் புதிய கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் அவர் முன்பு நடித்த பில்லா படத்தை போன்று கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது. தற்போது அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிவிட்டதாம்.

இந்தப் படத்திற்காக அஜித் தற்போது முழுநேரமும் ஜிம்மில் தான் இருக்கின்றாராம், தன் ரசிகர்கள் விருப்பத்திற்காக மீண்டும் உடல் எடையை கணிசமாக குறைத்து பிரம்மாண்ட படத்தை தரப்போகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here