தல 57 படத்தில் அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன்

தல 57 படத்தில் அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன்

85

Arjun-ajith-in-mankatha

இயக்குனர் சிவாவுடன் அஜித் மூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் 57-ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜுன் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அர்ஜுன் மீண்டும் இந்தப் படத்தில் அஜித்துடன் இணையவுள்ளார். அஜித், சிவா இணைந்த ‘வேதாளம்’ வெற்றிப் படத்திற்கு இசை அமைத்த அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY