Home Tamil Cinema News ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள் இல்லை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள் இல்லை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

255

celeb_banner

போர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களை பட்டியலிட்டு வெளியிடுவர். தற்போது இந்த வருடத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சல்மான் கான் 2-ம் இடத்தையும் அமிதாப் பச்சன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார்கள். இந்த வருடம் ஷாருக் கான் 257 கோடியைச் சம்பாதித்துள்ளார். சல்மான் ரூ. 202 கோடியையும் அமிதாப் ரூ. 112 கோடியையும் சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா கூறியுள்ளது. பட்டியலில் தோனிக்கு 4-ம் இடமும் அமீர் கானுக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளது. சச்சின் 8-ம் இடத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் 14-ம் இடத்திலும் உள்ளார்கள்.

தமிழ் நடிகர்களான தனுஷுக்கு 37-ம் இடம் கிடைத்துள்ளது. அவருடைய வருமானமாக ரூ. 42 கோடி என்று மதிப்பிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இந்தியா.

இதில் கமலுக்கு 46-வது இடமும், ரஜினிகாந்திற்கு 69வது இடமும், சூர்யாவிற்கு 71வது இடமும், ஆர்யாவிற்கு 80வது இடமும், காமெடி நடிகர் சந்தானத்துக்கு 52-வது இடமும், ஸ்ருதி ஹாசனுக்கு 61-வது இடமும் கிடைத்துள்ளது. பிரபலங்கள் பட்டியலில் தனுஷ், சந்தானம், ஸ்ருதி ஹாசனை விடவும் ரஜினி பின்தங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் அஜித், விஜய் இடம்பெறவில்லை. இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் 100 பட்டியல்