Home Tamil Cinema News குட்டி தல பிறந்தநாளில் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

குட்டி தல பிறந்தநாளில் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

219

hqdefault

அஜித்-ஷாலினி தம்பதியருக்கு கடந்த வருடம் மார்ச் 2-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாள் முதல் அந்த குழந்தைக்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘குட்டி தல’ என பெயரிட்டு அழைக்கத் தொடங்கினர்.

அதன் பின்னர், சில நாட்களில் அஜித்-ஷாலினி தம்பதியர் அந்த குழந்தைக்கு ஆத்விக் என பெயரிட்டனர். அதன்பிறகு ஆத்விக் முகத்தை வெளியில் காட்டாத அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தபோது, ஆத்விக்கின் முகம் வெளியில் தெரிய வந்தது.

அன்று முதல் அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’யை தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைத்து, ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ‘குட்டி தல’ பிறந்து ஒரு வருடம் ஆகிறது. அதனால் முதல் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் குட்டி தலக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.