Home Tamil Cinema News கன்னட சினிமாவிற்கு தீபாவளி ஸ்பெஷலாக அஜித் படம்

கன்னட சினிமாவிற்கு தீபாவளி ஸ்பெஷலாக அஜித் படம்

23

அஜித் நடிப்பில் 2013ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான படம் ஆரம்பம். படத்தில் ராணா டக்குபதி, ஆர்யா, டாப்ஸி, நயன்தாரா என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வசூலில் மாஸ் காட்டிய இப்படம் விரைவில் கன்னட சினிமாவில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம். தீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கன்னட சினிமாவில் தீபாவளி ஸ்பெஷலாக அங்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விவேகம் படம் தமிழில் வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில் கன்னட சினிமாவில் ஆரம்பம் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என வந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.