Home Tamil Cinema News சிறுத்தை சிவாவின் படத்தில் ‘அஜித்-சிவகார்த்திகேயன்’ ஒன்றிணைகின்றனர்

சிறுத்தை சிவாவின் படத்தில் ‘அஜித்-சிவகார்த்திகேயன்’ ஒன்றிணைகின்றனர்

126

ajith

அஜீத்தின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அஜீத் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வீரம், வேதாளம் அடுத்து 3 வது முறையாக அஜீத்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கப் போகிறார் என்று தகவல்கள் அடிபட்டு வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இன்னொரு படம் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் கூறியதும், வேதாளம் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அஜீத் மற்றும் சிறுத்தை சிவாவை சிவகார்த்திகேயன் சந்தித்ததும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போன்று உள்ளன. எனினும் படம் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்கலாம்!