Home Tamil Cinema News சிவா இயகத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கான வேலைகள் ஜூலையில் துவக்கம்

சிவா இயகத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கான வேலைகள் ஜூலையில் துவக்கம்

106

ajith

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 வது முறையாக அஜீத் நடிக்கவிருக்கிறார். முன்னதாகவே 2 முறை ஹிட் கொடுத்துள்ளதால் அஜீத் – சிறுத்தை சிவா 3 வது முறையாக இணையும் இப்படத்திற்கு, அஜீத் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவருகிறது.

சத்யஜோதி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வேதாளம் படத்தில் ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத்தையே மீண்டும் இப்படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜீத் மற்றும் படக்குழு நேரில் சந்தித்து இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாகவும், ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் அனுஷ்கா,நயன்தாரா, தமன்னா இவர்களில் ஒருவர் அஜீத்தின் ஜோடியாக நடிக்கலாம் என்று தகவல்கள் அடிபடுகின்றன. இதில் யாரை சிறுத்தை சிவா தேர்வு செய்யப்போகிறார் என அஜீத் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் தல 57 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here