Home Tamil Cinema News அஜித்தின் அடுத்த படம் துவங்குவது எப்போது!

அஜித்தின் அடுத்த படம் துவங்குவது எப்போது!

201

ajith

சிவா இயகத்தில் அஜித் நடித்து உருவாகும் மூன்றாவது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. அஜித் வேதாளம் படத்திற்கு பிறகு காலில் ஏற்பட்ட அடியால் சிகிச்சை பெற்று சில காலம் ஓய்வில் இருந்தார். இதனால் அவரால் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை.

மேலும் அஜித் தற்போது இரண்டு மாதங்கள் லண்டனில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் அஜித் சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் சிக்கல் உருவானது.

இந்தநிலையில் தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜுன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆரம்பக் கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தை அடுத்த வருட பொங்கல் விருந்தாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.