ஏகே 57 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அக்சரா ஹாசன்

ஏகே 57 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அக்சரா ஹாசன்

201

akshara hassan

சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணியில் உருவாகவிருக்கும் ஏகே 57 படத்தில் இரண்டு ஹீரோயிங்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதில் ஒரு ஹீரோயினாக காஜல் அகர்வாலையும், காமெடியனாக கருணாகரனையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் 2 வது ஹீரோயினாக அக்சரா ஹாசனை படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறதாம். சமீபத்தில் இந்தப் படத்தின் கதையைக் கேட்ட அக்சரா உடனடியாக சம்மதம் சொல்லி விட்டாராம். அந்தளவுக்கு அவரின் வேடம் மிகவும் நேர்த்தியாக இருக்குமாம்.

மேலும் இந்தப் படத்தில் அக்சராவுக்கு முக்கிய வேடம் இருப்பதாகவும், அஜித்துக்கு இணையாக அக்சராவின் கதாபாத்திரம் இருக்குமென்றும் கூறுகின்றனர். அக்சரா தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் முடிந்ததும் செப்டம்பர் மாதம் ஏகே 57 படக்குழுவினருடன் அவர் இணைந்து கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY