Home Tamil Cinema News கசிந்தன 2.ஓ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

கசிந்தன 2.ஓ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

102

akshaykumar 2O

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 என்ற பிரம்மாண்டமான படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் அக்ஷய் குமார் னடித்து வருகிறார்.

வித்தியாசமான தோற்றத்தில் உள்ள அக்ஷய் குமாரின் சில புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் உபயோகிக்கக்கூடாது, கேமரா பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை படத்தில் ரஜினியின் தோற்றம், ரோபோக்கள் தோற்றம், அக்ஷய் குமார் கெட்டப் என எதுவும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அக்ஷய் குமார், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை யாரோ இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். மிக வித்தியாசமான உயிருள்ள ரோபோ போன்ற தோற்றத்தில் அக்ஷய் வருகிறார்.

எந்திரனில் புரொபஸர் போரா உருவாக்கும் கறுப்பு நிற ரோபோவின் உயிருள்ள வடிவமாக இதில் அக்ஷய்யைப் பார்க்க முடிந்தது. இந்தப் படம் வெளியானது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here