அம்மாக்களும், மகள்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் அம்மா கணக்கு

அம்மாக்களும், மகள்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் அம்மா கணக்கு

124

amma-kanakku

அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அம்மா கணக்கு’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தை அஸ்வினி ஐயர் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் இணைந்து தயாரித்துள்ளனர்.

கதைப்படி திருமணத்திற்குப் பிறகு பசங்க 2 படத்தில் பொறுப்பான அம்மாவாக நடித்திருந்த அமலாபால், மீண்டும் இப்படத்தில் அம்மாவாக நடித்துள்ளார். அதிலும் இப்படத்தின் ஹீரோவே தான் தான் என்கிறார் அவர். நிஜத்தில் 24 வயதேயான அமலா பால், இப்படத்தில் 13 வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

படத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலாபால். படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆளாக்க அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பது குறித்து இப்படம் பேசுகிறது.

மைனா படத்திற்குப் பிறகு மிகவும் சவாலான வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளதாகக் கூறும் அமலாபால், ‘நிச்சயம் இப்படத்தில் வரும் அம்மா, எல்லாப் பெண்களுடனும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது ஒத்துப் போகும் கதாபாத்திரம்.

நிச்சயம் இந்தப் படம் எல்லா அம்மாக்களும், மகள்களும் பார்க்க வேண்டிய படம்’ என்று கூறியுள்ளார்.

 

 

NO COMMENTS

LEAVE A REPLY