Home Tamil Cinema News அமிதாப் பச்சன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் தான் வெறும் 25% கல்லீரலுடன் தான் உயிர் வாழ்வதாகக்...

அமிதாப் பச்சன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் தான் வெறும் 25% கல்லீரலுடன் தான் உயிர் வாழ்வதாகக் கூறியிருக்கிறார்.

109

மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் ஹெபாபிடிஸ் பி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் வெறும் 25% கல்லீரலுடன் தான் உயிர் வாழ்வதாகக் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பிரபலமான உச்ச நட்சத்திரம் நடிகர் அமிதாப்பச்சன். இவரது உடல் நிலை குறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். கூலி என்ற திரைப்படத்தில் நடித்த போது மோசமான விபத்து எனக்கு ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பாட்டில் அளவுக்கு ரத்தம் பெறப்பட்டு உடலில் ஏற்றப்பட்டது, அதனால் தான் நான் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு வருகிறேன்.

மருத்துவ உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது 2004ம் ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்கனவே ரத்தம் கொடுத்த இருநூறு பேரில் யாரோ ஒருவருக்கு ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியுள்ளது. அவரின் ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டதால் மெல்ல மெல்ல அந்த வைரஸ் எனது உடலிலும் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது. தற்போது 75% கல்லீரல் செயலிழந்து விட்டது, மீதம் உள்ள 25% கல்லீரலில் தான் செயல்படுகிறது.

பாதிப்பு வெறும் 12% இருக்கும்போதே கவனித்து இருந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டிருக்கலாம் ஆனால் காலம் கடந்து விட்டது. தற்போது 25% கல்லீரலுடன் வாழும் சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.

ஆனால் நான் எப்போதும் போலவே எனது செயல்களை செய்து வருகிறேன். அந்த விபத்திற்குப் பின்னர் 18 வருடங்கள் கடந்து விட்டன ஆனால் நான் நலமுடன் தான் இருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.