Home Tamil Cinema News சாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக் பத்திரிகையாளரை விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்

சாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக் பத்திரிகையாளரை விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்

163

sakshi-malik

சாக்‌ஷி மாலிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் குரேஷி என்பவர் சாக்‌ஷியையும், இந்தியாவையும் கிண்டலடித்து டிவிட்டரில் கருத்துப் போட்டு இப்போது இந்தியர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ஒரு டிவிட்டில் 119 போட்டியாளர்களை அனுப்பிய இந்தியா ஒரு வழியாக முதல் பதக்கத்தை, வெண்கலத்தை வென்றுள்ளது. இதை இப்போது 20 தங்கப் பதக்கம் வாங்கியது போல பில்டப் செய்வார்கள் பாருங்கள் என்று நக்கலடித்துள்ளார்.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. 50 லட்சம் பேர் கொண்ட நார்வே 2 பதக்கம் வென்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

குரேஷியின் இந்த டிவீட்டுகள் இந்தியர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு அவர்களும் டிவிட்டரில் குரேஷிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது டிவிட்டில் அவர், ‘ஒரு பதக்கம் என்பது எங்களுக்கு 1000 பதக்கங்களுக்குச் சமம். சாக்‌ஷி எங்களது பெருமை. ஒரு இந்தியராக பெருமைப்படுகிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here