Home Tamil Cinema News பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்து தீவில் தவித்த எமி ஜாக்சன்!

பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்து தீவில் தவித்த எமி ஜாக்சன்!

98

Amy-Jackson

நடிகை எமி ஜாக்சன் தற்போது ‘2ஓ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தனக்கு கிடைத்த சிறு இடைவெளிகளில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வருகிறார்.

அன்மையில் ஸ்பெயினில் உள்ள இபிஸா தீவுக்கு சென்ற எமி அங்கே தனது பாஸ்போர்ட், செல்போன் போன்றவைகளை கைப்பையுடன் சேர்த்து திருடர்களிடம் பறிகொடுத்திருக்கிறார். இதனால் தொடர்ந்து அவரால் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இபிஸா தீவிலிருந்து ஸ்பெயின் தூதரகம் சென்ற எமி அங்கே திருட்டு தொடர்பான புகார் அளித்தார். மேலும் தன்னுடைய மெயிலில் இருந்து பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களைக் கொடுத்து தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி வாங்கினார்.

இது தொடர்பாக இங்கிலாந்து தூதரகத்திலும் எமி புகார் கொடுக்க, இங்கிலாந்து தூதரகம் ஸ்பெயின் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு எமி ஜாக்சன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது. முன்னதாக வெளிநாடுகளில் நடிகைகள் வித்யுலேகா, சோனு சூட் ஆகியோர் தங்களது பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்து தவித்தது குறிப்பிடத்தக்கது.