விலைமாதுவாக நடிக்கும் அனைகா சோதி

விலைமாதுவாக நடிக்கும் அனைகா சோதி

142

Anaika Soti

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் படம் செம போத ஆகாதா. இந்தப் படத்தை அதர்வா தனது கிக்காஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகியாக அனைகா சோதியும் முக்கிய வேடங்களில் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா மற்றும் ஜான் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்காக நடிகை ரம்யா நம்பீசன் ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ போன்ற பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், இப்படத்தில் ‘விலைமாது வேடத்தில் நடிக்க பல நடிகைளும் தயக்கம் காட்டினர். ஆனால் அனைகா துணிச்சலுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் 2 பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்கி விட்டோம்.

மொத்தப் பணிகளையும் முடித்து விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்திருக்கிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY