Home Tamil Cinema News பீப் பாடல் விவகாரத்தால் மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்

பீப் பாடல் விவகாரத்தால் மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்

118

46722959

சிம்பு, அனிருத் இருவரும் அண்மையில் தான் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனால் பீப் பாடல் விவகாரம் தொடர்பான பிரச்சனை முடிந்தது என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கோவை 2வது கோர்ட்டில் கொங்குநாடு அருந்ததி பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் சிம்பு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான ஆணையை ஐகோர்ட்டில் பெற்று இருப்பதாக கூறி, அந்த ஆணையை சமர்ப்பித்தார்,

அதை நீதிபதியம் ஏற்றுக்கொண்டார். இசையமைப்பாளர் அனிருத் சம்மனை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here