Home Tamil Cinema News ‘பீப்’ பாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் அனிருத்

‘பீப்’ பாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் அனிருத்

135

anirudh

இசையமைப்பாளர் ‘அனிருத்’ உருவாக்கிய பீப் பாடலைக் கேட்ட மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மக்கள் எதிர்ப்பின் வீர்யத்தைக் கண்டதும், இப்போது தாம் வெளிநாட்டில் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட கச்சேரி செய்யும் வேலையில் இருப்பதாகவும், இந்தப் பாட்டுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு நேற்று அளித்த விளக்கத்தில், “இந்த பீப் பாடல் மட்டுமல்ல, இதுபோல இன்னும் 150 பாடல்களை நானும் அனிருத்தும் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

சிம்புவின் அப்பாவோ ஒரு படி மேலே போய், இந்தப் பாட்டுக்கு அனிருத்தான் இசையமைத்தார். என் மகன் பாடியிருந்தார். ஆனால் அதை பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். அதை முறைப்படி பயன்படுத்தும் முன் யாரோ களவாடி ரிலீஸ் பண்ணிவிட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், என்று ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.

இப்படியொரு காதிலே கேட்க முடியாத அளவுக்கு கேவலமான பாடலை தெரிந்தே உருவாக்கிவிட்டு, இப்படி சின்னப் பையன் போல நான் எதயும் செய்யவில்லை என்று சொல்கின்றானே என அனிருத்தையும் சீற ஆரம்பித்துள்ளனர் மக்கள்.

aniruth