Home Tamil Cinema News பீப் பாடலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது – அனிருத் விளக்கம்

பீப் பாடலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது – அனிருத் விளக்கம்

127

 

anirudh

பீப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் நேற்று முன்தினம் நள்ளிரவு அனிருத் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி 2 பக்க விளக்க கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

சமூக வலைதளங்களில் வெளியான பீப் பாடலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் அந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை. ஆனால் எனது பெயர் இதில் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. நான் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன்.

நான் ஒப்பந்தங்கள் மூலம் சினிமாவுக்கு மட்டும் இசையமைத்து வருகிறேன். பீப் பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று நடிகர் சிம்பு கூறி உள்ளார். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது நான் தமிழகத்தில் இல்லை. இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்று இருந்ததால், நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கமுடியவில்லை.

இருந்தபோதிலும், என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் என்னை எந்த நேரத்திலும் ஆஜராக சொன்னால் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அந்த விளக்கத்தில் அனிருத் கூறியுள்ளார்.

விளக்க கடிதத்தை பெற்றுக் கொண்ட போலீசார் அனிருத்திடம் விசாரித்தனர். நாங்கள் விசாரணைக்கு அழைத்தால் உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினர். எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விளக்கம் கொடுப்பேன் என்றார் அனிருத்.