Home Tamil Cinema News காதலர் தினத்தில் வெளியாகும் அனிருத்தின் ‘அவளுக்கென்ன’ பாடல்

காதலர் தினத்தில் வெளியாகும் அனிருத்தின் ‘அவளுக்கென்ன’ பாடல்

392

maxresdefault

இசையமைப்பாளர் அனிருத் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி அன்று காதலர்களுக்காக ‘அவளுக்கென்ன’ என்ற சிங்கிள் டிராக் ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார். இந்த பாடலுக்கான வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே, அனிருத்-விக்னேஷ் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், இந்த பாடலும் பெரிய அளவில் பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டும் காதலர் தினத்தில் எனக்கென யாரும் இல்லையே என்ற சிங்கிள் டிராக்கை அனிருத் வெளியிட்டிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த சில வாரங்களாக அனிருத் பற்றி பரபரப்பான செய்திகள் மீடியாக்களில் பரவி வந்தது. தற்போது ஓரளவுக்கு அவரைப் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை அனிருத் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here