Home Tamil Cinema News பாலா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அனுஷ்கா

பாலா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அனுஷ்கா

105

actress_anushka

பாலா இயக்கும் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக இந்தி நடிகை நடிக்கிறார். சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கிய பாலா, அதை முடித்து விட்டார். இந்தப் படம் பொங்கலன்று ரிலீசாகிறது.

இதையடுத்து ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, ராணா, அதர்வா ஆகிய 5 ஹீரோக்களை இணைத்து ‘மல்டி ஸ்டார்’ படம் இயக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை பாலா தொடங்கி விட்டார்.

இந்நிலையில், இதில் ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இப்போது அது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குனர் பாலாவை நேற்று அனுஷ்கா சென்னையில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.