Home Tamil Cinema News அனுஷ்கா சர்மாவுக்கு கிடைத்த புதிய பிரண்ட்!

அனுஷ்கா சர்மாவுக்கு கிடைத்த புதிய பிரண்ட்!

164

anushka sharma with her dog

நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் வீராத் கோஹ்லியை விட்டுப் பிரிந்த பின்னர் தற்போது அவருக்கு ஒரு சூப்பர் பிரண்ட் கிடைத்து விட்டாராம். எப்போது பார்த்தாலும் அவருடன்தான் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா சர்மா.

2008 ஆம் ஆண்டு ஷாருக்கானின் ரப் னே பனா தி ஜோடி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அனுஷ்கா சர்மா. 27 வயதாகும் அனுஷ்காவும், விராத் கோஹ்லியும் காதலித்து வந்தனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். காதலும் முறிந்து விட்டது. அவரவர் வழியில் போக ஆரம்பித்து விட்டனர்.

தற்போது சுல்தான் என்ற படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக அவர் நடிக்கிறார். இதற்காக தீவிரப் பயிற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார். நிஜமான வீராங்கனையாக இதில் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரப் பயிற்சி செய்கிராராம்.

மேலும் தற்போது ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் தனது செல்ல நாயுடன்தான் பொழுதைக் கழித்து வருகிறாராம் அனுஷ்கா. அதையும் போட்டோ போட்டுள்ளார் அனுஷ்கா. கோஹ்லியைப் பிரிந்த பின்னர் அந்த நாய்தான் தற்போது அனுஷ்காவுக்கு நல்ல தோழியாக உள்ளதாம். சின்னச் சின்ன விஷயங்களை அனுபவித்து வருவதாகவும் அனுஷ்கா கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here