Home Tamil Cinema News கோஹ்லியுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் அனுஷ்கா

கோஹ்லியுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் அனுஷ்கா

186

Anushka Sharma Reveals About Her Marriage Plans

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கிரிக்கெட் வீரர் கோஹ்லி இந்த ஆண்டே அனுஷ்காவை திருமணம் செய்ய நினைத்தார். அனுஷ்கா மறுக்கவே இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்தனர். அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் திருமணம் குறித்து அனுஷ்கா கூறுகையில், அனுஷ்காவுக்கு எப்பொழுது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள் என்று யாரும் என் குடும்பத்தாரை கேட்க மாட்டார்கள். என் பெற்றோர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். நானும் அப்படித் தான்.

திருமணமானால் அடுத்து பேரக்குழந்தைகளை எதிர்பார்ப்பது மிகவும் சுயநலமாகும். திருமணம் என்றால் மக்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. நடிகை ராணி முகர்ஜிக்கு திருமணம் நடைபெற்றது யாருக்குமே தெரியாது.

மன ரீதியாக ஒருவர் தயாரான பிறகே திருமணம் செய்ய வேண்டும். பிறர் அழுத்தம் கொடுப்பதற்காக எல்லாம் திருமணம் செய்யக் கூடாது. எனக்கு திருமணம் செய்யும் ஆசை உள்ளது. திருமணம் நடக்கும்போது நடக்கும் என்று நினைக்கிறேன். நான் மனரீதியாக தயாரான பிறகே திருமணம் செய்து கொள்வேன்.

திருமணம் என்பது ஜோக் அல்ல. இன்னொருவருடன் சேர்ந்து வாழ நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அப்படி நான் தயாரான பிறகு திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.

கோஹ்லி முடிந்த அளவுக்கு சீக்கிரமாக அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்பியது தற்போதைக்கு நிறைவேறாது போல் இருக்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here