Home Tamil Cinema News அஜீத்தின் 57 வது படத்தில் மீண்டும் அனுஷ்கா தான் ஜோடியாம்

அஜீத்தின் 57 வது படத்தில் மீண்டும் அனுஷ்கா தான் ஜோடியாம்

289

ajith-to-romance-with-anushka-again

அஜீத் நடிக்கும் 57-வது படத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தையும் சிவா இயக்குகிறார். அஜீத் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்துவந்தது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இதில் நடிக்கவில்லையாம்.

அதனால் இப்போது இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு இதில் மீண்டும் இருவரும் ஜோடி சேருகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.