Home Tamil Cinema News கொளுத்தும் வெயிலில் நடிகை அனுஷ்கா படும் கஷ்டம்

கொளுத்தும் வெயிலில் நடிகை அனுஷ்கா படும் கஷ்டம்

152

Anushka-Shetty

தென்னிந்தியா சினிமாவில் நடிகர்களுக்கு நிகராக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகை அனுஷ்கா ஆவார். இவர் அடுத்து பாகுபலி-2 படத்தில் நடித்து வருகிறார். பாகுபலி-2 படப்பிடிப்பில் அனுஷ்கா நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

அதில் அவர், ‘பாகுபலி படத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் ராணி வேடத்தில் வந்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் இளவரசி வேடத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். கிரீடம், அதிக எடையில் நகைகள், மன்னர் காலத்து உடைகள் அணிந்து மேக்கப் போட்டுக்கொண்டு இந்த கொளுத்தும் வெயிலில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது.

குதிரை சவாரி செய்வது, வாள் சண்டை போடுவது என்றும் நடிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இந்த படம் திரைக்கு வரும்போது ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை நினைத்து கஷ்டத்தை பொறுத்துக் கொள்கிறேன்’ என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here