Home Tamil Movie Reviews அப்பா – விமர்சனம்

அப்பா – விமர்சனம்

594
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், திலீபன் மற்றும் காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், நசத், கேபிரியல்லா, யுவ லக்ஷ்மி ஆகியோர் நடிக்க, சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா. இந்தப்படத்தினை நாடோடிகள் நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும் மதியழகன் இருவரும் தயாரித்துள்ளனர்.

3.2
இயக்கம்: சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதனின்
இசை: இளையராஜா
தயாரிப்பு: சமுத்திரக் கனி மற்றும் மதியழகன்
நடிகர்கள்: சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், திலீபன் மற்றும் காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், நசத், கேபிரியல்லா, யுவ லக்ஷ்மி

சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், திலீபன் மற்றும் காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், நசத், கேபிரியல்லா, யுவ லக்ஷ்மி ஆகியோர் நடிக்க, சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா. இந்தப்படத்தினை நாடோடிகள் நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும் மதியழகன் இருவரும் தயாரித்துள்ளனர்.

IMG_6912

எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார். படம் முடிந்து வெளியே வரும்போது ஹிட்லர் அப்பாவாக இருந்தாலும், பிள்ளைகளின் தோளில் கைபோட்டுக் கொள்வான் என்பது நிச்சயம்.

சமுத்திரக்கனி போன்ற நான்கு விதமான அப்பாக்கள். தமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதுதான் கதை. சமுத்திரக்கனி. போதனைகள் பல சொன்னாலும் படத்தின் பொழுதுபோக்குக்கு குறைவில்லை. முக்கியமான கேரக்டரில் அவரே நடித்திருப்பது மேலும் சிறப்பு.

தடால் புடாலென கோபத்தில் பாத்திரங்களை உடைத்துத்தள்ளும் மனைவி, மகனை இங்கிலீஷ் ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்பட, ‘அவன் பள்ளிக்கு போக இப்போ என்ன அவசரம்? நானெல்லாம் எட்டு வயசுலதான் பள்ளிக்கே போனேன்’ என்கிறார் அப்பா சமுத்திரக்கனி. பட்டு பாத்திரமெல்லாம் படீர் திடீராகிறது வீட்டில். வேறு வழியில்லாமல் அதே பள்ளியில் சேர்த்தால், அவர்களும் அவர்களின் கல்வி முறையும் சமுத்திரக்கனியை வெறிகொள்ள வைக்கிறது.

IMG_9847

பிறகு மகனை ஸ்கூலிலிருந்தே மீட்டு அழைத்து வருகிறார். பள்ளி போச்சு. மரியாதை போச்சு என்று கருதும் மனைவி கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு போய்விட, தனி மனிதனாக மகனை வளர்க்கும் கனி, அவனை உலகமே வியக்கும் நீச்சல் வீரனாக்குகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தையை மச்சான்கள் பிரிக்க முயல, மகனை மார்போடு அணைத்துக் கொண்டு அத்தனை அடியையும் தாங்கிக்கொள்ளும் காட்சியில், கண்கலங்க விடுகிறார் அந்த அன்பான அப்பா சமுத்திரக்கனி.

Image_002

இன்னொரு அப்பாவான தம்பி ராமய்யா தனது மகன் பிறக்கும் போதே அவன் சீக்கிரம் டாக்டராகி அமெரிக்காவில் ஆஸ்பிடல் கட்டணும் என்கிற ஆசையோடு திரிகிறார். எந்நேரமும் மகனை படி படி என்று வற்புறுத்தும் அவர், குழந்தைப்பருத்தின் குதூகலங்கள் எதையும் அவனை அண்டவிடாமல் அட்டகாசம் செய்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயில் போன்ற ஒரு ஆஸ்டலில் மகனை சேர்க்க, அங்கே படிக்கும் அவன் மனம் புழுங்கி எடுக்கும் முடிவு, பயங்கரம்.

IMG_4525

நமோ நாராயணன் தனது மகனை நாலு பேருக்கு தெரியாம இருந்துட்டு வந்துடணும்டா என்று சொல்லி சொல்லியே வளர்க்கிற இன்னொரு அப்பாவாக. மகனும் வளராமலேயே போய் விடுகிறான். ஒன்றரை அடி உயரம் கூட தாண்டாத அந்த வளர்ந்த சிறுவனின் தன்னம்பிக்கையை தட்டி எழுப்பி, சமுதாயத்தில் அவனையும் நிமிர வைக்கிறார் சமுத்திரக்கனி.

காக்கா முட்டை படத்தில் அறிமுகமான பெரிய காக்கா முட்டை விக்னேஷ், இவனுடன் ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நசத் என்று படத்தில் நடித்திருக்கும் ஐந்து குழந்தைகளும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் அந்த வயதில் என்ன பேசுவார்களோ, அந்த வயதிற்கே போய் வசனங்களை எழுதியிருக்கிறார் சமுத்திரக்கனி. எங்க வீட்டுக்கு அடிக்கடி வா. ஆனால் உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வா… என்கிற டயலாக்கில் தான் எவ்வளவு அர்த்தங்கள்.

IMG_6335

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை, அந்த குட்டிப்பையன் நசத் மூலம் நச்சென்று புரிய வைக்கிறது படம். ‘நாயை நாம் பாதுகாத்தால் அது கிராமம். நாய் நம்மை பாதுகாத்தால் அது நகரம்’ என்று இரண்டே வரிகளில் கைதட்டல் வாங்குகிறார் நசத். பொறுத்தமான இடங்களில் எல்லாம், ‘வளர்ப்பு சரியில்லைப்பா’ என்று விக்னேஷ் அலுத்துக் கொண்டால், திரையரங்கே சிரிப்பில் ஆழ்கிறது.

பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் என்றாலே சற்று எதிர்பார்ப்பும், உணர்ச்சி பூர்வமான வசனங்களும் இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன்னுடைய மகனிற்கு படிப்பு மட்டும் முன்னேற்றமல்ல இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு நல்ல அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார்.

IMG_7737_B

தம்பி ராமையா சாட்டை படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இந்த படத்திலும் ஒரு சுயநலமான மனிதராக நடித்திருக்கிறார். இந்த உலகம் சுயநலமிக்கது இதில் நீயும் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் மகனிற்கு சொல்லிக் கொடுக்கும் போதும் ரசிக்க வைக்கிறார்.

என்ன நடந்தால் என்ன நாம இருக்கிற இடம் தெரியக்கூடாது என்று தன்னுடைய பிள்ளையை வளர்க்கும் ஒரு அப்பாவி அப்பாவாக வரும் நமோ நாராயணன்.

Work_12_02

சமுத்திரகனியின் மகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ். இந்த படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய சந்தேகங்களை கேட்கும் போதும் அதை சமுத்திரகனி அவருக்கு புரிய வைக்கும் இடத்திலும் ஒரு நல்ல அப்பா மகன் உறவு திரையில் தெரிகிறது.

தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் ராகவ் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராகவும், தன்னுடைய அப்பாவின் புல்லெட் சத்தத்தை கேட்டு பயந்து ஓடும் போதும் ரசிக்க வைக்கின்றார். இதை தவிர நமோ நாராயனணின் மகனாக வரும் நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு பொருந்தி நடித்துள்ளனர்.

IMG_5683_02

படத்தின் காட்சியமைப்புகளுக்கு தனியாக எழுந்து நின்று பாராட்ட வேண்டும், அதிலும் சமுத்திரக்கனி தன் மகன் ஒரு பெண்ணின் மீது ஆசைக்கொண்டாலும், இந்த வயதில் இதை எப்படி அணுக வேண்டும் என்று விவரிக்கும் இடம், நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்.

இளையராஜாவின் இசை எப்போதும் இதுப்போன்ற படங்களுக்கு உயிராக இருக்கும், நம்மையும் அதோடு பயணிக்க வைக்கும், ஆனால் இதில் முலுமைபெறவில்லை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு சற்று மங்கியிருந்தாலும் சில இடங்களில் இது படமா இல்லை கண்ணெதிரே நாம் பார்க்கும் வாழ்க்கையா என்று வியக்க வைக்கிறது.

மொத்தத்தில் “அப்பா” – பிள்ளைகளுடன் அப்பாக்கள் படிக்கவேண்டிய பாடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here