ஏ.ஆர்.ரகுமான் நாளை சல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

ஏ.ஆர்.ரகுமான் நாளை சல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

23

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY