Home Tamil Cinema News ஜி.வி.பிரகாஷ் பட டீசரை ஏ.ஆர் ரகுமான் வெளியிடுகிறார்

ஜி.வி.பிரகாஷ் பட டீசரை ஏ.ஆர் ரகுமான் வெளியிடுகிறார்

123

Enakku-Innoru-Per-Irukku

நடிகர் ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. இவர் தற்போது சாம் ஆண்டன் இயக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிஃப்லையில் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வருகிற 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு, ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் ஹிட்டான டயலாக்.

அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்ததால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வடிவமைத்து வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது டீசரிலும் ஏதாவது புதுமையை செய்ய நினைக்கும் படக்குழுவினர், அஜித், விஜய் குறித்த சில விஷயங்களை இந்த டீசரில் இணைத்து வெளியிடவுள்ளார்களாம். பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போன்று டீசரும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.