சுந்தர்.சி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

சுந்தர்.சி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

103

AR Rahman to compose for Sundar C Movie

இயக்குனர் சுந்தர்.சி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இயக்கவிருக்கிறார். ஒருபுறம் இந்தப்படத்திற்கான நடிக, நடிகையரைத் தேடி வரும் சுந்தர்.சி மறுபுறம் திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறார்.

படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த படத்தில் பெரும்பாலும் சூர்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே அது பிரமாண்ட படமாக தான் இருக்கும், அந்த வகையில் இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் படம், ஷங்கரின் 2.0 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY