Home Tamil Cinema News அரண்மனை 2 படப்பிடிப்பு முடிந்தது – த்ரிஷா

அரண்மனை 2 படப்பிடிப்பு முடிந்தது – த்ரிஷா

96

Aranmanai

அரண்மனை படம் 2014ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலையும் ஒன்றுசேரக் குவித்தது. அரண்மனை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 2 படத்தை சுந்தர்.சி எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக படத்தின் 3 நாயகிகளில் ஒருவரான த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் படத்தைப் பார்க்க பொங்கல் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். அரண்மனை முதல் பாடத்தை விட அதன் இரண்டாம் பாகம் மிரட்டல் ஹிட் படமாக வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவித்திருக்கிறது.