Home Tamil Movie Reviews அரண்மனை 2 – விமர்சனம்

அரண்மனை 2 – விமர்சனம்

434
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கி நடித்துள்ள படம் அரண்மனை-2. இதில் சுந்தர்சியுடன் நாயகனாக சித்தார்த், நாயகியாக திரிஷா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சூரி, பூனம்பா ஜ்வா, ராதாரவி, சுப்பு பஞ்சு, மனோபாலா, கோவை சரளா, ராஜ்கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

2.7
இயக்கம்: சுந்தர் சி
ஒளிப்பதிவு: செந்தில்குமார்
இசை: ஹிப் ஹப் தமிழா
தயாரிப்பு: குஷ்புவின் – அவ்னி சினி மேக்ஸ்
நடிகர்கள்: சுந்தர்சி, சித்தார்த், சூரி, திரிஷா, ஹன்சிகா, பூனம்பஜ்வா, கோவை சரளா

அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கி நடித்துள்ள படம் அரண்மனை-2. இதில் சுந்தர்சியுடன் நாயகனாக சித்தார்த், நாயகியாக திரிஷா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சூரி, பூனம்பா ஜ்வா, ராதாரவி, சுப்பு பஞ்சு, மனோபாலா, கோவை சரளா, ராஜ்கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

maxresdefault286-640x360

பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இந்த அரண்மனையிலேயே அண்ணன் தங்கைகளான மனோபாலாவும், கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருக்கும்போது இரண்டுபேரும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள்.

அந்த நேரத்தில் ராதாரவி திடீரென கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். இதனால் இருவரும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள்.

Bollywood-

ராதாரவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த அரண்மனையிலேயே நர்சாக தங்கி பணிபுரிந்து வருகிறார் பூனம் பஜ்வா. மேலும், ராதாரவியை குணப்படுத்துவதற்காக சூரியும், நாடி ஜோசியராக அந்த அரண்மனைக்கு வருகிறார்.

இந்நிலையில், அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது, கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால், பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

trisha-story_647_122715051033

இந்த சூழ்நிலையில், அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக பணிபுரிந்து வரும் ராஜ்கபூர், திரிஷாவை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க, சித்தார்த் அவரை அடித்து, அரண்மனையை விட்டு துரத்துகிறார். சித்தார்த்தை பழிவாங்க குடித்துவிட்டு அரண்மனைக்கு வரும் ராஜ்கபூர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை சித்தார்த் தான் கொலை செய்துவிட்டார் என்று போலீசார் சித்தார்த்தை கைது செய்கிறது. இதையடுத்து, அரண்மனையில் நடந்த சம்பவங்களுக்கு தீர்வுகாண திரிஷா தனது அண்ணன் சுந்தர்.சிக்கு போன் செய்து அரண்மனைக்கு வரவழைக்கிறார்.

 C Sundar

அரண்மனைக்கு வரும் சுந்தர்.சி., அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடிவு செய்கிறார். இறுதியில், அவற்றையெல்லாம் சுந்தர்.சி., கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

ஹிப் ஹப் தமிழாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்க்கும்படியாக உள்ளன. செந்தில்குமாரின் மிரட்டும் ஒளிப்பதிவினால் படத்தில் திகிலை கூட்டியுள்ளார். வெங்கட்ராகவன் வசனம் படத்திற்கு பெரிய ப்ளஸ், படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் எஸ்.பி.

அரண்மனை படத்தினை தொடர்ந்து கதை, திரைக்கதை, இயக்கம் என எல்லா அம்சங்களையும் தனது கையில் எடுத்து மிரட்டும் திகில் படத்தை கொடுத்திருக்கிறார் சுந்தர்சி.

மொத்தத்தில் அரண்மனை 2 – திகில் நிறைந்த நகைச்சுவை பேய் படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here