Home Tamil Cinema News சையிப் அலிகான்- கரீனா கபூரிடையே சண்டை ஏற்படுத்திய அர்ஜுன் கபூர்!

சையிப் அலிகான்- கரீனா கபூரிடையே சண்டை ஏற்படுத்திய அர்ஜுன் கபூர்!

135

story29

பாலிவுடில் சையிப் அலிகான், கரீனா கபூர் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். இதில் கரீனா கபூர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இப்படித்தான் நடிப்பேன் என்றில்லாமல் எந்த மாதிரியான காட்சிகள் என்றாலும் துணிந்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் கரீனா கபூரும், அர்ஜுன் கபூரும் நடித்த கி&கா படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. இதில் பல முத்தக்காட்சிகள் இடம்பெற்றது. இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு ஒரு நாள் அர்ஜுன் கபூர், கரீனா கபூருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது அதை பார்த்துள்ள சையிப் அலிகான், என்ன தான் வேலை சம்மந்தமாக இருந்தாலும், இந்த நேரத்தில் எப்படி நீ போன் செய்யலாம் என அர்ஜுன் கபூரை வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்த செய்தி எப்படியோ பாலிவுட் மீடியாக்களுக்கு தெரியவர, தற்போது வட இந்திய சினிமாவில் இது தான் ஹைலைட் செய்தியாக உள்ளது.