Home World News இந்திய விமானப்படைக்கு ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானம்: அமெரிக்கா பரிசீலனை

இந்திய விமானப்படைக்கு ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானம்: அமெரிக்கா பரிசீலனை

36

வாஷிங்டன்: ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையை நவீனமயமாக்கி வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆயுதம் தாங்கிய ‘பிரிடேட்டர் சி அவென்சர்’ ரக ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. ரூ.52,000 கோடி செலவில் 80 முதல் 100 ஆளில்லா விமானங்களை வழங்க அமெரிக்க அரசிடம் கடந்தாண்டு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு 22 கார்டியன் ரக ஆளில்லா உளவு விமானங்களை விற்க அமெரிக்கா சம்மதித்தது. இந்த விமானங்கள் இந்திய பெருங்கடலில் நமது விமானப்படையின் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here