Home Tamil Cinema News குறும்புத்தனமான பேச்சால் அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த ஆர்யா!

குறும்புத்தனமான பேச்சால் அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த ஆர்யா!

145

mfs-Bangalore-Days-Tamil-title-in-soup-news

தனது கலகலப்பான பேச்சால் அனைத்து நடிகைகளையும் ரசிக்கவைப்பவர் ஆர்யா. அவர் தற்போது மலையாளத்தில் வெற்றி கண்ட பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதில் படத்தில் நடித்த ஆர்யா, ராணா, சிம்ஹா, ஸ்ரீ திவ்யா மற்றும் பார்வதி மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் படத்தை பற்றி பல விஷயங்கள் பேசிய போது ஒரு பத்திரிகையாளர் ராணாவிடம் த்ரிஷா உறவு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினர்.

இதற்கு இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று ஆர்யாவை மாட்டிவிட்டார்.

உடனே ஆர்யாவின் பக்கம் பத்திரிகையாளர் பார்வை போக, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று ராணாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று தனது குறும்புத்தனமான பேச்சால் அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.