Home Tamil Cinema News ஆர்யாவின் திருமணம் சமுதாயத்துக்கு நல்லது என்று கூறும் விஷால்!

ஆர்யாவின் திருமணம் சமுதாயத்துக்கு நல்லது என்று கூறும் விஷால்!

117

Arya Vishal

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சில வாரங்களாக முன்னோட்ட நிகழ்ச்சிகளை சன்டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதில் ஒருசில நட்சத்திரங்கள் தவிர மற்ற அனைவருமே கலந்து கொண்டனர்.

நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் போட்டிக்கான 8 அணிகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிவா, குஷ்பூ இருவரும் தொகுத்து வழங்கினர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பாடல் என ஐபிஎல் ரேஞ்சுக்கு அணியினரை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

விஷாலின் மதுரை காளைஸ் அணி அறிமுகமாகும் போது ஆர்யாவின் திருமணம் எப்போது நடக்கும்? என்று நடிகர் கார்த்தி விஷாலிடம் கேட்டார். அதற்கு விஷால், ‘ஆர்யாவின் திருமணம் நடந்தால் இந்த சமுதாயத்துக்கு நல்லது. கிசுகிசுவின் ராஜாவாக அவன் வலம்வருகிறான் விரைவில் அவனுக்கு திருமணம் நடைபெறும்’ என்று பதில் கூறினார்.

தொடர்ந்து மற்ற அணிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னும் 2 நாட்களில் நடைபெறப் போகும் இந்தப் போட்டியில், மற்ற மாநில நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று விஷால் தெரிவித்துள்ளார்.