Home World News மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: 200 க்கும் மேற்பட்டோர் பலி..

மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: 200 க்கும் மேற்பட்டோர் பலி..

12

மெக்சிகோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

1985-ஆம் ஆண்டுக்கு பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அப்போது, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.