Home Tamil Breaking News மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..

மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..

27

மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இன்று காலை 10:30 மணியளவில் ரெயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மழையை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள், மழை நின்றதும் வெளியேற அவசரம் காட்டிய போது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது என முதலில் தெரிவிக்கப்பட்டது.

ரெயில் நிலையத்தில் விபத்து நேரிட்டது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடன் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிக்கு விரைந்தனர். இதற்கிடையே ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கியவர்கள் அங்கு இருந்த பயணிகள் காப்பாற்ற முயற்சி செய்தனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்ற காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 27 பேர் பலியாகியுள்ளனர்.பலர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை ரெயில் நிலைய நெரிசல் குறித்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.