Home Tamil Cinema News பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கும் அதர்வா!

பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கும் அதர்வா!

141

Actor Atharva

நடிகர் அதர்வா ஈட்டி, கணிதன் போன்ற தரமான படங்களில் நடித்ததன் ரசிகர்களிடையே நல்ல பெயர் பெற்று வருகிறார். இவர் அடுத்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் இப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மணிரத்னம் தற்போது இயக்கிவரும் கார்த்தி, சாய் பல்லவி படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இப்படம் பற்றி அறிவிப்பார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இயக்குனர் மணிரத்னம் தமிழ் திரையுலகில் அதர்வாவின் தந்தையான முரளி நடித்த பகல் நிலவு என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here