Home Tamil Cinema News மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய்!

மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய்!

135

theri-new-hq-stills-01-600x400

விஜய் நடித்த தெறி உலகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை அட்லி இயக்கியிருந்தார். இந்தநிலையில் மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் படங்களில் தெறியே மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. அதனால், மீண்டும் அவர் அட்லி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும், அவர்கள் மீண்டும் இணையும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எனவும் பேசப்படுகிறது.

மேலும், விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால், அப்பட வேலைகள் முடிந்தவுடன் அட்லி, விஜய் கூட்டணி பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.