அட்லி இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

அட்லி இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

54

Atlee-new-hero-nivin-pauly

இதுவரை இயக்குனராக மட்டும் இருந்த அட்லி, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் ‘A For Apple’ என்று தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படமாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அட்லியின் நண்பர் சூர்யா இயக்கவிருக்கிறார். இதில் நடிப்பதற்கு தற்போது நிவின்பாலி மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மற்ற தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும், அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘தெறி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY