Home Tamil Breaking News குஜராத்: ராகுல் சென்ற கார் மீது கல்வீச்சு

குஜராத்: ராகுல் சென்ற கார் மீது கல்வீச்சு

26

தனீரா: குஜராத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற, காங்., துணைத்தலைவர் ராகுலின் கார் மீது, சிலர் கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர்.
குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலை மையிலான,பாஜ.,ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால், குஜராத்தில், பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்., துணைத்தலைவர் ராகுல் பார்வையிட்டு வரு கிறார். பனாஸ்கந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் வெள்ள பாதிப்பை நேற்று பார்வை யிட்ட பின், காரில், தனீராவில் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு சென்று கொண்டிருந்தார் .ராகுல் காரை பின் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களும்,கார்களில் சென்றனர். அப்போது, ராகுல் சென்ற கார் மீது, சிலர் கற்களை வீசினர். இதில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந் தது. விரைந்து செயல்பட்ட போலீசார், விரைந்து சென்று, கற்களை வீசிய ஒருவனை பிடித்து கைது செய்தனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில், ‘ராகுல் கார் மீது கற்களை வீசிய ஒருவனை கைது செய்துள்ளோம். இந்த தாக்குதலில், ராகுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றனர்.