Home Tamil Cinema News ரஜினிகாந்த், ஷங்கர் வீடுகள் முற்றுகை?

ரஜினிகாந்த், ஷங்கர் வீடுகள் முற்றுகை?

211

rajinikanth-shankarரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் “எந்திரன் 2.O”. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரஜினியின் கபாலி படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், தற்போது எந்திரன் 2.O படப்பிடிப்பிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்ஸன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறினார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டும் என்று பதிவுகள் போட்டுள்ளார். இதனால் தமிழ் தேசியவாதிகள் கொதித்தெழுந்து எமி ஜாக்ஸனுக்கு எதிராக வலைதளங்களிலும், நேரடியாகவும் போராட துவங்கியுள்ளனர்.

தற்போது, தமிழர் முன்னேற்ற படை என்ற இயக்கம், இன்னும் 3 நாட்களில் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் ரஜினி, ஷங்கர் வீடு முன்பு முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார்கள். இதனால் எந்திரன் 2.O படக்குழு சற்று கலக்கத்தில் உள்ளனர்.