Home Tamil Sports News இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தேதி அறிவிப்பு

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தேதி அறிவிப்பு

35

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா,நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணியுடன் வரும் 12-ம் தேதி சென்னையில் பயிற்சி ஆட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் போட்டிகளில், முதல்போட்டி 17-ம்தேதி சென்னையில் நடக்க உள்ளது. கொல்கத்தா, இந்தூர், பெங்களூரு, நாக்பூர் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்கின்றன. பின்னர் ராஞ்சி, கவுகாத்தி, ஹைதராபாத் நகரங்களில் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதைதொடர்ந்து இந்தியா வரும் நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி-20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.