அஜித்துக்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்திருக்கும் புதிய பட்டம்!

அஜித்துக்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்திருக்கும் புதிய பட்டம்!

85

ajith

நடிகர் அஜித்துக்கு பொதுவாக பட்டம், பதவி, அடைமொழி என்பதில் எல்லாம் ஆர்வம் கிடையாது. இருப்பினும், அல்டிமேட் ஸ்டார் என்று திரையுலகம் அவருக்கு ஒரு பட்டத்தை கொடுத்தது.

இதைத்தவிர்த்து தற்போது அஜித் ரசிகர்கள் அவரை ‘தல’ என்று அடைமொழி வைத்துதான் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில், புதியதாக அஜித்துக்கு புதிய பட்டம் ஒன்று தானாக தேடி வந்திருக்கிறது.

அதுவும், ஹாலிவுட்டில் இருந்து வந்திருப்பதுதான் ஆச்சர்யமான ஒன்று. ஆஸ்திரியா நாட்டின் புகழ்பெற்ற ஊடகம் ஒன்று அஜித்துக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்துள்ளது.

ஹாலிவுட்டில் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கு இருக்கும் பெயர், புகழ், மதிப்பு, மரியாதைக்கு இணையாக இந்தியாவில் அஜித்துக்கும் அதே அளவு புகழ் இருப்பதை அறிந்து இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY